என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
- கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.
தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
கட்சிப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணிமுடிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
- மாவட்ட செயலாளரை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- இளங்கோ உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என மாவட்ட செயலாளரை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகியுள்ளது.
- வேட்பாளரின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி பிரிண்ட் செய்யப்படும்.
- வேட்பாளர்கள் படம் இனிமேல் கலரில் பிரிண்டில் ஒட்டப்படும்.
இந்தியாவில் நடைபெறும் மக்களவை, மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் படம், கட்சி சின்னம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அவற்றை பார்த்து வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.
அதில் உள்ள புகைப்படும் மற்றும் சின்னங்கள் போன்றவை தெளிவாக தெரியாது. இதனால் வேட்பாளர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வேட்பாளர் பெயர், கட்சி சின்னம் தெளிவாக தெரிவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அந்த வகையில் பீகார் தேர்தலில் இருந்து வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் அச்சிடப்பட்டு ஒட்டப்படும். மேலும், வேட்பாளர்களின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி அச்சிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் வாக்காளர்கள் வேட்பாளர் புகைப்படத்தை தெளிவாக பார்த்து, சீரியல் நம்பர் மற்றும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்து குழப்பம் இல்லாமல் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் புகைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நான்கில் மூன்று பங்கு இடத்தில் கலர் படம் ஒட்டப்படும்.
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.
டோக்கியோ:
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.
84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.
இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.
- கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
- தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார்.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிலையில், திமுகவின் முப்பெரும் விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
- 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
- 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2ஆவது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்மிரி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வயிடைந்தது. 3ஆவது மற்றும் கடைசி போட்டி 20ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.
- ஓட்டல் நிர்வாகம் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியது.
- ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
பீஜிங்:
சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர்.
தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவியது.
விசாரணையில், அந்தச் சிறுவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஹாய்டிலோ இழப்பீடு வழங்கியது.
இதற்கிடையே, ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாங்காய் நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதால் உணவகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இளைஞர்களின் பெற்றோர் உணவகத்திற்கு 2.71 கோடி ரூபாய் நஷட் ஈடு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
- விபத்தில் கார் உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கியதால், உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்கு டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான், UAE அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
- இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய், அபு தாபி) நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் பிரிவுகளுக்கான லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன.
இதில் நான்கு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி விட்டன. இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் UAE ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு முன்னேறியுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து வாய்பை இழந்தது.
பாகிஸ்தான், UAE அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இதனால் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். இதனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுவார்கள்.
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக UAE, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த நம்பிக்கையடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக களம் இறங்கும்.
அதேவேளையில் UAE சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அந்த அணி வீரரக்ள் விரும்புவாரக்ள். ஐக்கிய அரபு அமீரகததின் தொடக்க ஜோடிகளான அலிஷன் ஷரஃபு, கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக இருவரும் மாயாஜாலம் நிகழ்த்தினால் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது.
- வங்கதேச அணிக்கெதிராக 8 ரன்களில் வெற்றியை நழுவ விட்டது ஆப்கானிஸ்தான்.
- இலங்கையை சாய்த்தால் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வருகிறது. 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேச அணி தோல்வியடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (1.546 ரன்ரேட்) முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் விளையாடி விட்டது. இதில் 2-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று (-0.270) 2ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று (2.150) 3ஆவது இடத்தில் உள்ளது.
நாளை இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.
இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நாளைய போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் ரன்ரேட் பார்க்கப்படும். அதனடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் நாளைய போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏ பிரிவில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு தகுதி பெறும்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ட்யூட் படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் அப்பேட் கொடுத்துள்ளார். இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் அவரது எக்ஸ் தள பக்கத்தில்," இனிமே லவ் பண்ற பொண்ணு விட்டுட்டு போனா அவள பாத்து இந்த ரெண்டு வார்த்த சொல்லுங்க.. அந்த ரெண்டு வார்த்த என்ன என்றும்
இதுதொடர்பாக இன்று மாலை 4.35 மணிக்கு 2வது சிங்கிள் அப்டேட் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர்.
இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் 55.60 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்நிலையில், மிராய் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.
இதுகுறித்து, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.






