என் மலர்
தலைப்புச்செய்திகள்
- குருபா தற்போது ஓபிசி பட்டியலில் உள்ளது.
- லிங்காயத்ஸ் மற்றும் வொக்காலிகாஸ் பிரிவினருக்கு அடுத்ததாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவாகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபா சமூகத்தினரை, எஸ்.டி. பட்டியலில் சேர்க்க அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எஸ்.டி. பிரிவில் உள்ள சில சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மாநில அரசு பரிந்துரைதான் செய்ய முடியும். மாநில அரசுதான் முடிவு எடுக்கும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
இந்த நடவடிக்கை முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே செய்யப்பட்டது. யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு இது தொடர்பாக முடிவு செய்யும். மாநில அரசான நாங்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். இந்த சமூகம் வர வேண்டியது இருந்தால், அவர்கள் சேர்க்கப்படுவார்கள். இல்லை என்றால், அவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
குருபா தற்போது ஓபிசி பட்டியலில் உள்ளது. லிங்காயத்ஸ் மற்றும் வொக்காலிகாஸ் பிரிவினருக்கு அடுத்ததாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவினராகும்.
கர்நாடகா மாநிலத்தில் ஐந்து ஓபிசி பிரிவுக்கு 32 சதவீத இடதுக்கீடு வழங்கப்படுகிறது. குருபா 2ஏ பிரிவின் கீழ் வருகிறது. 2ஏ பிரிவுக்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- ஆசிய கோப்பையில் இன்று பாகிஸ்தான் - UAE அணிகள் மோதவுள்ளது.
- UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகிய நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடுவரை நீக்கியது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாக நிலையில் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் UAE அணியுடன் இன்று 8 மணிக்கு மோதவுள்ள நிலையில் தற்போது வரை பாகிஸ்தான் அணி ஹோட்டலில் இருந்து புறப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது.
- மண்ணை காக்கும் கடமை, பொறுப்பு நமக்குதான் இருக்கு.
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாநிலங்கள்தான் நாட்டிற்கு வலிமையான அடித்தளம் என மத்திய அரசு என்று அல்ல, ஒன்றிய அரசு என அழுத்தமாக சொல்கிறோம். போராடி போராடி தமிழகத்தை தலை நிமிர்த்துகிறோம். இப்படி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலை குணிய விடமாட்டோம்.
தமிழக மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. மண்ணை காக்கும் கடமை, பொறுப்பு நமக்குதான் இருக்கு. டெல்லி நம் மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒன்றா? இரண்டா?. இந்தி மொழியை திணிக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். கல்வி நிதியை விடுவிக்க மறுக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் உரிமையை பறிக்கிறார்கள்.
அந்நாள், இந்நாள் என என்றைக்குமே இங்கு அடக்கு முறைக்கு நோ என்ட்ரிதான். ஆதிக்கத்திற்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் பாஜக-வுக்கு இங்கே நோ என்ட்ரிதான். இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு.
மூன்று முறை மத்தியில் ஆட்சி அமைத்தும், தமிழகத்தில் மட்டும் மோடி மஸ்தான் வேலை பழிக்கவில்லையே. இன்னுமா எங்களை பற்றி உங்களுக்கு தெரியல. நம்முடைய உரிமைகள் பறிபோவதை அனுமதிக்கலாமா?. பாஜக-வை தற்போது நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், மாநிலங்கள் இல்லை என்பதை நோக்கி நகருவார்கள்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
- தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
- மாற்றோ, மாற்ற வேண்டும் எனச் சொன்னவர்கள் மாறினார்கள் என்றார்.
கரூர்:
தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியது பா.ஜ.க.தான் என உண்மையை பேசியிருக்கிறார்.
கைப்பாவை அரசை தி.மு.க. நீக்கியதாக பா.ஜ.க. நம்மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தொடர்ந்து நமக்கு எவ்வளவோ குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பார்த்து முடங்கி விடுவோம் என நினைச்சாங்க. தி.மு.க. என்ன மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா?
இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில கட்சி ஒன்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியர்கள் நாம். நமக்கு 70 வருட வரலாறு இருக்கிறது.
அதன்பின் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம் எனச் சொன்னார்கள். இப்போவும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னத்த மாற்ற போறாங்க.
நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். மாற்றோ, மாற்ற வேண்டும் எனச் சொன்னவர்கள் மாறினார்கள். மறைந்து போனார்கள். தி.மு.க. மட்டும் மாறவில்லை. மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. இதுதான் தமிழக பாலிட்டிக்ஸ் என தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார்.
- அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார்.
அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மந்தனாவின் 3-வது ஒருநாள் சதமாகும்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் பல சாதனைகளை மந்தனா படைத்துள்ளார். இது இந்த ஆண்டு மந்தனாவின் 3-வது சதம் ஆகும். மேலும் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த உலகின் முதல் வீராங்கை என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார். 2024-ம் ஆண்டில் அவர் நான்கு சதங்களையும் அடித்திருந்தார்.
அடுத்ததாக மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். ஸ்மிரிதி மந்தனா 15 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 8 சதங்களுடன் மிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கவுர் 2-வது இடத்தில் உள்ளனர். மேலும் ஆசிய நாடுகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் போட்டியில் 12 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களையும், டி20 போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் மந்தனா உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.
அதிக சதம் அடித்த வீராங்கனைகள்:-
மெக் லானிங் - 17 சதங்கள்
ஸ்மிருதி மந்தனா - 15 சதங்கள்
சுசி பேட்ஸ் - 14 சதங்கள்
டாமி பியூமண்ட் - 14 சதங்கள்
சார்லோட் எட்வர்ட்ஸ் - 13 சதங்கள்
மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்தில் உள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியல்:-
சூசி பேட்ஸ் - 12 சதங்கள்
ஸ்மிருதி மந்தனா- 12 சதங்கள்
டாமி பியூமாண்ட் - 12 சதங்கள்
- அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார் எடப்பாடி.
- தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாதவர் இபிஎஸ்.
கரூர்:
தி.மு.க. முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. எப்போதும் நெருக்கடிகளுக்கு அஞ்சுகிற கட்சி அல்ல.
அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார் எடப்பாடி.
தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாதவர் இபிஎஸ்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பின்றி என்னை ஒருமையில் விமர்சிக்கிறார்.
திராவிட கொள்கை என்னவென்றே தெரியாமல் அதிமுக தலைவராக இருக்கிறார் எபிஎஸ்
அண்ணாயிசம் பேசிய அதிமுகவினரை அடிமையிசம் பேச வைத்துள்ளார் இபிஎஸ்.
காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு என மக்கள் கேட்கின்றனர்.
தமிழ்நாட்டைக் காவல்காக்கும் அரணாக விளங்குவது திமுக என தெரிவித்தார்.
- 2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.
- சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம்.
திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இது கரூர் அல்ல. திமுக ஊர் இந்த ஊர். கொட்டும் மழையில்தான் இதே நாளில் ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார். கொட்டு மழையில் தொடங்கி வைத்த இந்த கழகம் 75 ஆண்டுகள் அல்ல. 100 ஆண்டுகளை நாம் காணப் போகிறோம்.
திமுக வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது. மழை பெய்தாலும் குடை பிடித்துக் கொண்டு, நாற்காலியை பிடித்துக் கொண்டு விழாவை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி.
2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றிப் பயணம் தமிழக மக்கள் ஆதரவோடு 2026 தேர்தலிலும் தொடரும்.
- ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று, டெல்லி அரசின் 17 பொது நலத்திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வாக்காளர் அதிகாரம் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காக. அதன்மூலம் அவர்களுடைய உதவியோடு தேர்தலில் வெற்றிபெற விரும்புகிறது. ராகுல் பாபாவும், காங்கிரஸ் கட்சியியும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை தொடங்கியுள்ளனர்.
ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை. ஊடுருவல்காரர்கள் உதவியோடு தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறார்கள். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான SIR செயல்பாட்டை பாஜக ஆதரிக்கிறது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது.
- பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர்.
புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.
நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.
பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
140 கோடி இந்தியர்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் என தெரிவித்தார்.
- தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
- திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.
தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், கனிமொழி எம்பிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருது வழங்கி கவுரவித்தார்.
இதேபோல், பாளையங்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சீத்தாராமனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் விருது- சோ. மா. ராமச்சந்திரன், முரசொலி அறக்கட்டளை சார்பில் 'முரசொலி செல்வம்' விருது- மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
பாவேந்தர் விருது- அமரர் குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது- மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது- பொங்கலூர் நா. பழனிச்சாமி.
- இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹர்லீன் தியோல் 10, கேப்டன் ஹர்மன்பிரித் கவூர் 17 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனையடுத்து மந்தனாவுடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து தீப்தி சர்மா 40 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ராதா யாதவ் 6, அருந்ததி ரெட்டி 4 என அடுத்தடுத்து வெளியேறினார்.
இறுதியில் ரிச்சா கோஷ்- சினே ராணா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா கோஷ் 29, ராணா 24 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
- கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.
தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
கட்சிப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணிமுடிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.






