என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2019-இருந்து தொடர்ந்து வெற்றி: தமிழக மக்கள் ஆதரவோடு 2026 தேர்தலிலும் தொடரும்- திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு
    X

    2019-இருந்து தொடர்ந்து வெற்றி: தமிழக மக்கள் ஆதரவோடு 2026 தேர்தலிலும் தொடரும்- திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

    • 2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.
    • சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம்.

    திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இது கரூர் அல்ல. திமுக ஊர் இந்த ஊர். கொட்டும் மழையில்தான் இதே நாளில் ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார். கொட்டு மழையில் தொடங்கி வைத்த இந்த கழகம் 75 ஆண்டுகள் அல்ல. 100 ஆண்டுகளை நாம் காணப் போகிறோம்.

    திமுக வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது. மழை பெய்தாலும் குடை பிடித்துக் கொண்டு, நாற்காலியை பிடித்துக் கொண்டு விழாவை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி.

    2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றிப் பயணம் தமிழக மக்கள் ஆதரவோடு 2026 தேர்தலிலும் தொடரும்.

    Next Story
    ×