என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கைகுலுக்க மறுத்த விவகாரம்: தொடரில் இருந்து விலகிய பாகிஸ்தான்?
- ஆசிய கோப்பையில் இன்று பாகிஸ்தான் - UAE அணிகள் மோதவுள்ளது.
- UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகிய நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடுவரை நீக்கியது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாக நிலையில் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் UAE அணியுடன் இன்று 8 மணிக்கு மோதவுள்ள நிலையில் தற்போது வரை பாகிஸ்தான் அணி ஹோட்டலில் இருந்து புறப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






