என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாற்று என கூறியவர்கள் மாறினார்கள், காணாமல் போனார்கள்: விஜயை சாடிய மு.க.ஸ்டாலின்
- தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
- மாற்றோ, மாற்ற வேண்டும் எனச் சொன்னவர்கள் மாறினார்கள் என்றார்.
கரூர்:
தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியது பா.ஜ.க.தான் என உண்மையை பேசியிருக்கிறார்.
கைப்பாவை அரசை தி.மு.க. நீக்கியதாக பா.ஜ.க. நம்மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தொடர்ந்து நமக்கு எவ்வளவோ குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பார்த்து முடங்கி விடுவோம் என நினைச்சாங்க. தி.மு.க. என்ன மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா?
இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில கட்சி ஒன்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியர்கள் நாம். நமக்கு 70 வருட வரலாறு இருக்கிறது.
அதன்பின் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம் எனச் சொன்னார்கள். இப்போவும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னத்த மாற்ற போறாங்க.
நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். மாற்றோ, மாற்ற வேண்டும் எனச் சொன்னவர்கள் மாறினார்கள். மறைந்து போனார்கள். தி.மு.க. மட்டும் மாறவில்லை. மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. இதுதான் தமிழக பாலிட்டிக்ஸ் என தெரிவித்தார்.






