என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் பாஜக-வுக்கு நோ என்ட்ரி: திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு..!
    X

    தமிழகத்தில் பாஜக-வுக்கு நோ என்ட்ரி: திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

    • தமிழக மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது.
    • மண்ணை காக்கும் கடமை, பொறுப்பு நமக்குதான் இருக்கு.

    கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மாநிலங்கள்தான் நாட்டிற்கு வலிமையான அடித்தளம் என மத்திய அரசு என்று அல்ல, ஒன்றிய அரசு என அழுத்தமாக சொல்கிறோம். போராடி போராடி தமிழகத்தை தலை நிமிர்த்துகிறோம். இப்படி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலை குணிய விடமாட்டோம்.

    தமிழக மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. மண்ணை காக்கும் கடமை, பொறுப்பு நமக்குதான் இருக்கு. டெல்லி நம் மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒன்றா? இரண்டா?. இந்தி மொழியை திணிக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். கல்வி நிதியை விடுவிக்க மறுக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் உரிமையை பறிக்கிறார்கள்.

    அந்நாள், இந்நாள் என என்றைக்குமே இங்கு அடக்கு முறைக்கு நோ என்ட்ரிதான். ஆதிக்கத்திற்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் பாஜக-வுக்கு இங்கே நோ என்ட்ரிதான். இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு.

    மூன்று முறை மத்தியில் ஆட்சி அமைத்தும், தமிழகத்தில் மட்டும் மோடி மஸ்தான் வேலை பழிக்கவில்லையே. இன்னுமா எங்களை பற்றி உங்களுக்கு தெரியல. நம்முடைய உரிமைகள் பறிபோவதை அனுமதிக்கலாமா?. பாஜக-வை தற்போது நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், மாநிலங்கள் இல்லை என்பதை நோக்கி நகருவார்கள்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×