search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன வலைதளத்தில் சோனி ஸ்மார்ட்போன்: டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தகவல்
    X

    சீன வலைதளத்தில் சோனி ஸ்மார்ட்போன்: டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தகவல்

    டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சோனி எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சோனி எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீன வலைத்தளமான வெய்போவில் பதிவிடப்பட்டுள்ளது. டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா சோனி நிறுவனத்தின் நடுத்தர ஃபேப்லெட் சாதனமாக இருக்கலாம் என்றும் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    சோனி எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக தயாராகி வரும் எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா சமீபத்தில் சான்றளிக்கும் வலைத்தளத்தில் H4233 என்ற குறியீட்டு பெயரில் காணப்பட்டது. இந்த வலைத்தளத்தில் வெளியான தகவல்களின் படி எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    புதிய எஸ்பீரியா XA2 அல்ட்ரா வடிவமைப்புகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டூயல் செல்ஃபி கேமராவும், பிரைமரி கேமரா முந்தைய ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமான இடத்தில் பொருத்தப்படலாம் என்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் சோனி எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் GFXBench தளத்திலும் கசிந்திருந்தது. இதில் வெளியான தகவல்களில் எக்ஸ்பீரியா XA2 ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் மற்றும் அட்ரினோ 508GPU வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P10 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    புதிய சோனி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் நீக்கப்படலாம் என கூறப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா R1 மற்றும் R1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.12,990 மற்றும் ரூ.14,990க்கு வெளியிட்டது.

    புகைப்படம்: வெய்போ
    Next Story
    ×