என் மலர்

  செய்திகள்

  ப்ளிப்கார்ட் விற்பனை: ஐபோன் 6 இவ்வளவு தானா?
  X

  ப்ளிப்கார்ட் விற்பனை: ஐபோன் 6 இவ்வளவு தானா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ப்ளிப்கார்ட் தளத்தில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்தியேக விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி செய்யப்பட்ட குறைந்த விலையில் வாங்க முடியும்.
  புதுடெல்லி:

  பிள்ப்கார்ட் தளத்தில் 'Own Your Dream Phone' எனும் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், கூகுள், மோட்டோரோலா நிறுவனங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

  பிளிப்கார்ட் அறிவித்துள்ள விற்பனை இன்று (ஜூன் 22) துவங்கி ஜூன் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி எக்சேஞ்ச் சலுகை மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் வழங்கப்படுகிறது. பிரபல ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஐபோன் எஸ்இ, ஐபோன் 5s, ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல், கூகுள் பிக்சல் XL, மோட்டோ இசட் உள்ளிட்ட மாடல்களின் விலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

  ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி)  இந்தியாவில் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி) ரூ.82,000 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் ரூ.59,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 5.5 இன்ச் எச்டி 3D, கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
  * A10 ஃபியூஷன் சிப்
  * 3 ஜிபி ரேம் 
  * வாட்டர் ரெசிஸ்டண்ட்
  * 12 + 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
  * 7 எம்பி செல்ஃபி கேமரா
  * 2900 எம்ஏஎச் பேட்டரி  

  ஐபோன் 6S (32ஜிபி)  இந்தயாவில் ரூ.47,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 6S (32ஜிபி) தற்சமயம் ரூ.32,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 4.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  * A9 ஃபியூஷன் சிப்
  * 2 ஜிபி ரேம் 
  * 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
  * 5 எம்பி செல்ஃபி கேமரா
  * 1715 எம்ஏஎச் பேட்டரி

  ஐபோன் 7 (32ஜிபி)  இந்தியாவில் ரூ.60,000க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 7 தற்சமயம் ரூ.42,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
  * 64-பிட் A10 ஃபியூஷன் சிப்
  * 2 ஜிபி ரேம் 
  * வாட்டர் ரெசிஸ்டண்ட்
  * 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
  * 7 எம்பி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
  * கைரேகை ஸ்கேனர் 
  * 1960 எம்ஏஎச் பேட்டரி

  ஐபோன் 5S  இந்தியாவில் ரூ.20,000க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 5S தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 4.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  * A7 ஃபியூஷன் சிப்
  * 1 ஜிபி ரேம் 
  * 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
  * 1.2 எம்பி செல்ஃபி கேமரா
  * 1560 எம்ஏஎச் பேட்டரி

  கூகுள் பிக்சல்  இந்தியாவில் ரூ.57,000 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.39,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக 2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 5.0 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED டிஸ்ப்ளே
  * குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர்
  * 4 ஜிபி ரேம் 
  * 12.3 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
  * 8 எம்பி செல்ஃபி கேமரா
  * கைரேகை ஸ்கேனர் 
  * 2770 எம்ஏஎச் பேட்டரி

  மோட்டோ இசட், ஸ்டைல் மாட்ஸ்  இந்தியாவில் ரூ.39,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மோட்டோ இசட் தற்சமயம் ரூ.10,000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 5.7 இன்ச் QHD AMOLED டிஸ்ப்ளே
  * ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
  * 4 ஜிபி ரேம் 
  * 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
  * 8 எம்பி செல்ஃபி கேமரா
  * கைரேகை ஸ்கேனர் 
  * 3000 எம்ஏஎச் பேட்டரி 

  சாம்சங் சி9 ப்ரோ  இந்தியாவில் சாம்சங் சி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட்டு தற்சமயம் ரூ.31,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  சிறப்பம்சங்கள்:

  * 6.0 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  * ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராசஸர்
  * 6 ஜிபி ரேம் 
  * 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
  * 16 எம்பி செல்ஃபி கேமரா
  * கைரேகை ஸ்கேனர் 
  * 4000 எம்ஏஎச் பேட்டரி
  Next Story
  ×