என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
- முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பிற்கு பின்னர் இருவரும் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
வருகிற 27-ந்தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் விஜயை நேரில் சந்தித்ததாகவும், காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பிற்கு பின்னர் இருவரும் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் என்ன பதவி அளிப்பது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
- வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
குமரிக்கடல் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது உண்மையா? அல்லது வதந்தியா? என தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
- மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இன்று புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக கணிப்பு.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசியிருந்தார்.
- 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன்.
இவர் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசிய தை கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த புகாரில் கைதில் இருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது.
- அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும்.
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அப்போது பேசிய அவர்," டிசம்பர் 15ம் தேதி அன்று நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு, தொடர் தோல்வி ஆகியவற்றால் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது" என்றார்.
மேலும், அதிமுக ஒன்றிணையாவிட்டால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
- தவெக பொறுப்பாளர்கள் 5 பேர் சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
- த.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அடுத்த கட்டமாக கூட்ட நெரிசலில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேர் இன்று சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு த.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொறுப்பாளர்கள் 5 பேரிடம் சிபிஐ 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன்.
- புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!
வடசென்னை வளர்ச்சிக்கு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மருத்துவமனைகள், முதல்வர் படைப்பகங்கள், குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையங்கள் என #வடசென்னை-யின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!
1967-இல் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன். இன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். விரைந்து பணிகளை முடித்த அமைச்சர் சேகர்பாபு, @CMDA_Official-க்குப் பாராட்டுகள்!
"வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதிசெய்யும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.






