என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சென்னை அடையாறில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பியூஸ்கோயலை டி.டி.வி. தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள்.
கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.
- தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
- தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (வண்டிஎண்.16107), மறுநாள் இரவு 8.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (16108), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படும்.
திருச்சி-நியூ ஜல்பாய்குரி
* திருச்சியில் இருந்து வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20610), புறப்பட்டத்தில் இருந்து 3-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரியில் இருந்து வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20609), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மாலை 4.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரெயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு புறப்பட்டு நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20604), புறப்பட்டதில் இருந்த 4-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20603), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
- சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக-புதுச்சேரி மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.
- தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சென்னை:
ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் முத்திரையாகச் செயல்படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.
இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது.
அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றன.
இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினை பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளி விவரங்களாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றன.
இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.
- கறிக்கோழி வளர்ப்போர் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நாளை) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை-கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோழி வளர்ப்புக் கூலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு சாத்தியக்கூறு இல்லை என கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியிலான ஒப்பந்த விவசாய முறையில் (Contract farming on Commercial basis) கோழிப்பண்ணைகள் நடத்துகின்றனர். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் பரஸ்பர உடன்பாட்டுடன் விலை, அளவு, தரம், நேரம் தொடர்பாக கையெழுத்திடுகின்றனர்.
இந்த ஒப்பந்தங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறையின் பார்வையின் கீழ் வருவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் ஒத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே இதுதொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியிலான தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் என்பதால், இந்திய ஒப்பந்ததாரர்கள் சட்டம் 1872- ன் (Indian Contracts act,
1872) படி சட்ட நடவடிக்கைகளின் மூலமே தீர்வு காண முடியும்.
இக்காரணங்களால் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பான இப்பிரச்சனையை உரிய சட்ட அமைப்பினை நாடி சட்டத்தீர்வு காணும்படி தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்பவர்களின் தொடர் போராட்டத்தால், சந்தையில் கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடக்க சாத்தியக்கூறு இல்லாத நிலையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.400-ஐ எட்டும் அபாயம் இருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தான பிறகும் போராட்டத்தை தொடர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.
- தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது.

கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100% களப் பணியாற்ற வேண்டும்

நல்லா கேட்டுக்கோங்க... தேர்தல் நெருங்கிடுச்சு, இனி நம் சிந்தனை- செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
- என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி- நான்கு மண்டலங்களில் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகள்.
- தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் தேர்ந்தெடுக்க தீர்மானம்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக மகளிர் பரப்புரை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என எண்ணற்ற மகளிர் மேம்பாட்டுத்திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டுப் பெண்களை உலகளவில் 'வெல்லும் தமிழ்ப்பெண்களாக' மாற்றியுள்ள தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று திராவிட மாடல் 2.0 அமைந்திடும் வகையில், நமது திராவிட மாடல் அரசு பெண்களுக்குச் செய்துள்ள சாதனைத்திட்டங்களைப் பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு கழகத்திற்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்திட வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 29.12.2025 அன்று மேற்கு மண்டல மகளிரணி சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடு பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வரும் 26.01.2026 அன்று டெல்டா மண்டல 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளை அடுத்து,
பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அப்போது கழக அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் கழகத்திற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்தப் பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக கழத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு தலைகுனியாது - பரப்புரை
பிப்ரவரி-1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 4 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இப்பரப்புரைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்து 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரையை வெற்றியடையச் செய்திடுவது என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' - வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு
கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் வெற்றிகரமாக நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 7-ல் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டங்களை நடத்தி வெற்றிக்கான வியூகத்தை வகுத்திடுமாறு மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகளால் வெற்றிக்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2), 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) ஆகியோரைத் தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ''என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி'' - வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதன்படி பிப்ரவரி-11 அன்று சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம் - படப்பையிலும், பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21 அன்று தெற்கு மண்டலம் மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்திட இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்- கழக மாநில மாநாடு
சட்டப்பேரவைத் தேர்தலில் கழத்தின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 லட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
- அரசு பேருந்தும், காரும் மோதியதில் இரண்டு தலைகீழாக கவிழ்ந்தன.
- 15 பயணிகள் காயம் அடைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் முந்திச் செல்ல முயற்சி செய்தபோது இரு வாகனங்களும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.
நேற்று இதே பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அரசுப் பேருந்து டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 15-ந்தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
- கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை ஐந்தாயிரத்து நானூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற 30-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று 24-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் என்று கோஷமிட்டனர். பல்வேறு பகுதியிலிருந்து கோட்டை ரெயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் மொத்தமாக பாரிமுனை பகுதியில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 13-வது நாளாக கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முகாமிட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். அரசின் ஊதிய உயர்வை ஏற்காமல் தொடர்ந்து போராடி வரும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு ஊழியர் மயக்கம் அடைந்தார். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது.
- ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார்.
பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாடவில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார். ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை; ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
மேலும், ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது. மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காக, நாடு முழுவதும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
- ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என இ.பி.எஸ். அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், ஆண்களுக்கும் இலவச பயண வாக்குறுதி ஏன்? என்பதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சிவகாசியில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "மகளிருக்கு மட்டும் இலவச பயணத்தை அறிவித்து ஒன்றாக இருந்த குடும்பத்தை திமுக அரசு பிரித்துள்ளது. மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவிற்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார்" என்று வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்தார்.






