என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ரித் பாரத் ரெயில்"

    • தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (வண்டிஎண்.16107), மறுநாள் இரவு 8.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (16108), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படும்.

    திருச்சி-நியூ ஜல்பாய்குரி

    * திருச்சியில் இருந்து வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20610), புறப்பட்டத்தில் இருந்து 3-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரியில் இருந்து வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20609), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மாலை 4.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரெயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

    * நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு புறப்பட்டு நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20604), புறப்பட்டதில் இருந்த 4-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20603), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசத்திக்காக பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் என இருந்த நிலையில், சேரக்கூடிய இடங்களை மிகவும் விரைவாக சென்றடையும் வகையில் வந்தே பாரத் என்ற ரெயிலை அறிமுகப்படுத்தியது.

    குறைந்த பெட்டிகளை கொண்ட ரெயிலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதிவேகமாக செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ரெயில் முழுவதும் ஏ.சி. பெட்டிகளை கொண்டது. கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் இந்திய ரெயில்வே அம்ரித் பாரத் ரெயில் என்பதை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்று புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    பீகார் மாநிலத்தின் தர்பங்கா- டெல்லியின் ஆனந்த் விஹார் இடையில் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அயோத்தி வழியாக செல்லும்.

    மற்றொரு ரெயில் மேற்கு வங்காளத்தின் மால்டா டவுண்- பெங்களூருவின் விஸ்வேஸ்வராய முனைமம் இடையே இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது. படுக்கை வசதி கொண்ட ரெயிலாகும். தற்போது எல்.இ.டி. லைட்டுகள், செல்போன் சார்ஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டதாக உள்ளது. மேலும், கட்டணமும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு 6 வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

    • தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரெயில்களோ, அம்ரித் பாரத் ரெயில்களோ தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படும்.
    • சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதல் ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் 30-ந்தேதி (இன்று) 6 வந்தே பாரத் ரெயில்களையும், 2 'அம்ரித் பாரத்' ரெயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில், அம்ரித் பாரத் ரெயில் குளிர்சாத பெட்டி இல்லாத சாதாரண வகை ரெயில்களாகவே இயக்கப்படும். இதில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியில் மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு ரெயிலில் 1,600 பயணிகள் பயணிக்க முடியும். 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும்.

    இதேபோல, தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரெயில்களோ, அம்ரித் பாரத் ரெயில்களோ தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படும். இப்போதைக்கு அந்த தேவை எழவில்லை. மிக்ஜம் புயல் வந்த போது வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதல் ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
    • இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீண்ட தூர பயணம் என்றாலே பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் பயணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த செலவில் பல்வேறு வசதிகளுடன் நீண்ட தூரம் பயணம் செய்து கொள்வது தான். பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரெயில்வே துறையும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

    அந்த வகையில் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரெயில்கள் இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 26 அம்ரித் பாரத் ரெயில்களை கூடுதலாக இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில், நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். அதேபோல, சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    அம்ரித் பாரத் ரெயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை மற்றும் அடுத்த ரெயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது. இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    அம்ரித் பாரத் ரெயில் குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறனை கொண்டது. மேலும் இந்த ரெயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிதாக வர இருக்கும் அம்ரித் பாரத் ரெயில்கள் மீது பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடத்தில் உள்ள 16 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

    ×