என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை.
    • மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாகவும், எங்கள் கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதாகவும் என்னிடம் நிருபர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்புவார்கள்.

    தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் கூட, இப்போது நாட்டு மக்களின் நலன் கருதி பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்திருக்கிறது.

    கடந்த வாரம் பா.ம.க. தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருக்கிறார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்.

    இப்போது எங்கள் கூட்டணி மக்களின் நன்மை கருதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் வந்து சேரும். அதன் பிறகு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையான வகையில் ஆட்சி அமைக்கும்.

    கேள்வி: சசிகலா நடத்திய கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

    பதில்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் ஆதரவு தந்தாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாட்டு மக்களின் நலன் கருதி யார் ஆதரவு தந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

    கேள்வி: பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது?

    பதில்: பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பிரதமர் மோடி மீதும் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மீதும் அக்கறை கொண்டு ஆதரவு தருகிறார்கள். பிரதமர் வருகையின்போது 5 லட்சம் பேருக்கும் மேல் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மதுராந்தகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த கூட்டம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்.

    கேள்வி: உங்கள் கூட்டணிக்கு டி.டி.வி. தினகரன் வருவாரா?

    பதில்: அதுபற்றி நான் இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. 23-ந்தேதி மேடையில் யார், யார் இருக்கிறார்கள்? என்று நீங்கள் பார்க்கலாம்.

    கேள்வி: பிரதமர் வந்த பிறகுதான் கூட்டணி முடிவாகுமா?

    பதில்: பொறுத்திருந்து பாருங்கள். பா.ஜ.க. அகில இந்திய தலைவராக 45 வயது இளைஞர் பீகார் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதுதான் பா.ஜ.க.வின் சுதந்திரம். அவர் செயல் தலைவராக இருக்கும் போதே திருவனந்தபுரத்தில் மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறோம். மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம். அதன் பிறகு தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநில தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் நல்லாட்சி உருவாக நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
    • டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தமிழகம் வருகை தந்துள்ளார். இவர் தான் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.

    பின்னர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். மக்கள் விருப்பம் நல்லாட்சியை கொடுக்க இந்த கூட்டணியில் சேருகிறோம். எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே. விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. தமிழகத்தில் நல்லாட்சி உருவாக நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் மக்களாட்சி அமைய நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்து உள்ளோம் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற டி.டி.வி. தினகரன், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அவர் சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதையடுத்து பா.ஜ.க. - அ.ம.மு.க. இடையே ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

    • எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
    • அதிமுக உட்கட்சி மோதலில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்தவர்

    சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து இன்று தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்தார்.

    இந்நிலையில் அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?

    அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அணி முடிவெடுப்பதில் தாமதம் செய்வதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 


    • தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.
    • விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தமிழகம் வருகை தந்துள்ளார். இவர் தான் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.

    பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். மக்கள் விருப்பம் நல்லாட்சியை கொடுக்க இந்த கூட்டணியில் சேருகிறோம். எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே. விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

    தமிழகத்தில் நல்லாட்சி உருவாக நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் மக்களாட்சி அமைய நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. தான் என்பதால் இணைந்துள்ளேன்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் கொடுத்தார்.

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு வைத்திலிங்கம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் வரவேற்று அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு பூச்செண்டு கொடுத்து அவரது தலைமையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

    இந்நிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணா ஆரம்பித்த தாய் கழகமான தி.மு.க.வில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.

    * தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. தான் என்பதால் இணைந்துள்ளேன்.

    * அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது.
    • தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்திக்க உள்ளார்.

    சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    ஒரு மாதத்திற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கூறிய டி.டி.வி.தினகரன், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைய உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்திக்க உள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
    • சபாநாயகரை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    • ஆளுநர், அரசின் உரையை வாசிக்காமல் ஏதோ கூறிவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார்.
    • சட்டசபையில் மறைந்த எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. அதில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று தலைமை செயலகம் வந்தார்.

    சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புத்தகம் கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்று, பேரவைக்கு அழைத்து வந்தனர்.

    முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர், அரசின் உரையை படிக்காமல் வேறு சில கருத்துகளை கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு எழுந்து நின்று, இந்த சபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே பேச அனுமதி இருக்கிறது. மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது. எனவே அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர், அரசின் உரையை வாசிக்க வேண்டும் என்றார்.

    ஆளுநர் ரவி, மீண்டும் ஏதோ பேசினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, இந்த சபையில் முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டும். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும், இதுதான் இந்த சபையின் மரபு. இது ஏற்கனவே ஆளுநருக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதையடுத்து ஆளுநர், அரசின் உரையை வாசிக்காமல் ஏதோ கூறிவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் மறைந்த எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஏ.வி.எம்.சரவணன், எம்.எல்.ஏ. கே.பொன்னுசாமி, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான அருணாச்சலம் வெள்ளையன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

    • தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.

    தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

    இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது.

    தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், பவுனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.

    ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது.

    இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், பவுனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்துள்ளது.

    தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது. தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3½ லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

    19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-1-2026- ஒரு கிராம் ரூ.340

    19-1-2026- ஒரு கிராம் ரூ.318

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    17-1-2026- ஒரு கிராம் ரூ.310

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.
    • வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார்.

    இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    இதையடுத்து வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.

    • கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சென்னை அடையாறில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பியூஸ்கோயலை டி.டி.வி. தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள்.

    கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

    பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.

    ×