என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்
- சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.
- வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார்.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.
இதையடுத்து வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.
Next Story






