என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
சென்னை:
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று இணைந்தது. இணைப்புக்கு பிறகு மத்திய மந்திரியும், பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் பேட்டி அளித்தனர். அப்போது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அ.ம.மு.க. உறுதுணையாக இருக்கும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று 2021-ம் ஆண்டிலேயே அமித்ஷா விரும்பினார்.
2021-ம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இந்த முறை அமைத்தே தீருவோம். நாங்கள் எங்கள் பங்காளி சண்டைகளை ஓரம் வைத்து விட்டு அனைத்தையும் மறந்து சேர்ந்திருக்கிறோம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற நோக்கில் இணைந்திருக்கிறோம்.
எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தூக்கி எறிந்துவிட்டு முழு மனதோடு கூட்டணிக்கு வந்து இருக்கிறோம். கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.ம.மு.க. இடம் பெறும். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளதற்கும் பேரை குறிப்பிடாமல் அவருக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.
- கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இங்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா (வயது20) என்பவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
நேற்று அதிக அளவில் உடல்நிலை மோசம் அடைந்ததால் சரண்யா கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவர்களில் 4 பேர் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மற்ற 3 பேரும் தங்களது ஊர்களுக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளனர். இறந்து போன மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு காரணமா? என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபாகும்.
- தி.மு.க. அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறை தான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பில் இருக்கும் வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார்.
ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல 'ஆளுநர் உரை' அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட 'அவை மரபு' மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் அவரது இப்போக்கை வி.சி.க. வன்மையாகக் கண்டிக்கிறது.
'தமிழ்த்தாய் வாழ்த்து' என்பது அவை நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் 'தேசிய கீதம்' என்பது அவை நிறைவிலும் தான் இசைக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்த ஒன்று தான். எனினும், தொடக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்க வாதம். இது தி.மு.க. அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.
சனாதன சக்திகளிடம் வலுப்பெற்றுள்ள 'திராவிடக் கருத்தியலுக்கு' எதிரான 'ஒவ்வாமையின்' வெளிப்பாடு தான் ஆளுநரின் இத்தகைய செயல் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.
இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான 'தேநீர் விருந்தில்' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த ஆண்டும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகியிருந்த சமயத்தில், "பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போயிடலாம்" என்று டிடிவி தினகரன் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அன்புமணி தலைமையில் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- நாளை மறுநாள் நடக்கும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பேச வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னை:
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணி மற்றும் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று ஆலோசித்தது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் இந்த கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் சேர்ந்துள்ளதை அடுத்து செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் சத்தியபாமா மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நாளை மறுநாள் நடக்கும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பேச வேண்டியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.
- பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.
* காப்பீட்டுத் தொகை முறைகேட்டை கண்டித்த மேலாளர் கல்யாணியை கொன்ற சக ஊழியருக்கு கடும் தண்டனை தர வேண்டும்.
* கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் உரிய நேரத்தில் அறிவிப்பேன்.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக யாரும் எங்களை அணுகவில்லை.
* பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.
* பியூஷ் கோயலை சந்திக்க எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை.
* கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கும் அழைப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
- கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இபிஎஸை டிடிவி தினகரன் சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான இபிஎஸ் இல்லை. தொடர்ந்து பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எடப்பாடியை ஏற்றுக்கொள்வீர்களா? என்பதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது டிடிவி தினகரன் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே, பியூஷ் கோயல் நயினார் நாகேந்திரனிடம் கிளம்பலாம் எனக்கூறி பேச்சை நிறுத்தினார். இது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
- தீயசக்தி தி.மு.க.-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும் அமைக்கப்பட்ட கூட்டணி.
- தி.மு.க. குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,
தீயசக்தி தி.மு.க.-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டி.டி.வி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க. குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அகற்ற ஒன்றாக இணைந்துள்ளோம்.
- தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற டி.டி.வி. தினகரன், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அவர் சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதையடுத்து பா.ஜ.க. - அ.ம.மு.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்ததில் மகிழ்ச்சி.
* தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.
* ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அகற்ற ஒன்றாக இணைந்துள்ளோம்.
* தி.மு.க.வின் ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும்.
* தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது.
* டி.டி.வி.தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது.
- இந்த வார இறுதியில் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மூடுபனியுடன் கூடிய குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வானிலை அமைப்பு நகர்ந்து வரும்போது நாளை மறுநாள் முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனால் இரவுகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2 நாட்களாக பல இடங்களில் பனி மூட்டமான காலை பொழுதும், இரவில் அதிக குளிரும் நிலவின.
குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 20.3 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 19.3 செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை திங்கட்கிழமை விலகியதால் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரவில் குளிர் தொடர வாய்ப்பு உள்ளது.
இந்த வார இறுதியில் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை.
- மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாகவும், எங்கள் கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதாகவும் என்னிடம் நிருபர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்புவார்கள்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் கூட, இப்போது நாட்டு மக்களின் நலன் கருதி பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்திருக்கிறது.
கடந்த வாரம் பா.ம.க. தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருக்கிறார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்.
இப்போது எங்கள் கூட்டணி மக்களின் நன்மை கருதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் வந்து சேரும். அதன் பிறகு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையான வகையில் ஆட்சி அமைக்கும்.
கேள்வி: சசிகலா நடத்திய கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் ஆதரவு தந்தாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாட்டு மக்களின் நலன் கருதி யார் ஆதரவு தந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
கேள்வி: பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது?
பதில்: பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பிரதமர் மோடி மீதும் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மீதும் அக்கறை கொண்டு ஆதரவு தருகிறார்கள். பிரதமர் வருகையின்போது 5 லட்சம் பேருக்கும் மேல் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மதுராந்தகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த கூட்டம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்.
கேள்வி: உங்கள் கூட்டணிக்கு டி.டி.வி. தினகரன் வருவாரா?
பதில்: அதுபற்றி நான் இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. 23-ந்தேதி மேடையில் யார், யார் இருக்கிறார்கள்? என்று நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி: பிரதமர் வந்த பிறகுதான் கூட்டணி முடிவாகுமா?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள். பா.ஜ.க. அகில இந்திய தலைவராக 45 வயது இளைஞர் பீகார் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதுதான் பா.ஜ.க.வின் சுதந்திரம். அவர் செயல் தலைவராக இருக்கும் போதே திருவனந்தபுரத்தில் மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறோம். மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம். அதன் பிறகு தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநில தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






