search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regional Meteorological Centre"

    • தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
    • நகரின் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை :

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மிக தீவிர புயலாக நிலவிய 'பிப்பர்ஜாய்' வடக்கு திசையில் நகர்ந்து நேற்று கோவாவில் இருந்து மேற்கு, வடமேற்கு திசையில் 700 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து மேற்கு, தென்மேற்கு திசையில் சுமார் 620 கி.மீ. தொலைவிலும், குஜராத் போர்பந்தரில் இருந்து தென், தென்மேற்கு திசையில் சுமார் 600 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டது.

    இந்த புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கியும், அடுத்த 3 தினங்களில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கியும் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு திசையின் காற்று, வெப்ப சலனம் ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    11-ந் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-ந் தேதி (நாளை) முதல் 14-ந் தேதி (புதன்கிழமை) வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழையும், வேலூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், காட்பாடி, குடியாத்தம், மேலாளத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சின்கோனா, சோலையார், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பூண்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், காஞ்சீபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

    சென்னையில் நேற்று பகல் வேளையில் வெயில் கொளுத்தினாலும், மாலை வேளையில் இதமான வானிலை நிலவியது. கருமேகங்கள் தென்பட்டது. எனவே மிதமான மழை வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் லேசான துளிகள் மட்டும் விழுந்தது. பெரிய மழை பெய்யவில்லை.

    தற்போது 'பிப்பர்ஜாய்' புயல் மையம் கொண்டுள்ள கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் இந்த கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    • கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.18 டிகிரி பதிவானது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தாலும், அனல் காற்றினாலும் மக்கள் வாடி வதங்கி போய் இருக்கின்றனர். அந்தவகையில் நேற்று தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. இதில் வேலூரில் அதிகபட்சமாக 107.24 டிகிரி பதிவானது. இதுதவிர நேற்று ஒரே நாளில் கரூரில் இயல்பைவிட 5 டிகிரியும், மதுரை, வேலூர், தூத்துக்குடியில் 4 டிகிரியும் அதிகரித்து வெப்பம் உக்கிரமாக இருந்தது. தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் நேற்று வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் -104.18 டிகிரி

    சென்னை மீனம்பாக்கம் -105.26 டிகிரி

    ஈரோடு - 102.56 டிகிரி

    கரூர் - 103.1 டிகிரி

    மதுரை நகரம் - 103.28 டிகிரி

    மதுரை விமான நிலையம் - 103.28 டிகிரி

    நாகப்பட்டினம் - 101.3 டிகிரி

    நாமக்கல் - 101.3 டிகிரி

    பாளையங்கோட்டை - 101.12 டிகிரி

    பரங்கிப்பேட்டை - 102.2 டிகிரி

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி

    திருப்பத்தூர் - 101.48 டிகிரி

    திருச்சி - 102.38 டிகிரி

    திருத்தணி - 105.98 டிகிரி

    தூத்துக்குடி - 103.1 டிகிரி

    வேலூர் - 107.24 டிகிரி

    • சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னையில் நேற்றும் வெயில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.

    இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகீர் தகவலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 104.18 டிகிரி - (40.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கடலூர் - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    ஈரோடு - 101.12 டிகிரி - (38.4 செல்சியஸ்)

    கரூர் - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    மதுரை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    நாகை - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 104 டிகிரி - (40 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 101.84 டிகிரி - (38.8 செல்சியஸ்)

    திருச்சி - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    திருத்தணி - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    வேலூர் - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    • அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் விடைபெறுகிறது.
    • கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை :

    கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்தாலும், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அவ்வப்போது கோடை மழையும் தன் பங்குக்கு பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பான மழை அளவைவிட 65 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சூளகிரி 7 செ.மீ., சின்னார் அணை 6 செ.மீ., வறட்டுப்பள்ளம் 4 செ.மீ., தேன்கனிக்கோட்டை, வி.களத்தூர், குன்றத்தூர் தலா 3 செ.மீ., செம்பரம்பாக்கம், குமாரபாளையம், அம்மாபேட்டை, துவாக்குடி, கோத்தகிரி, விரகனூர், கவுந்தம்பாடி, திருவாலங்காடு, தாமரைப்பாக்கம், ஆவடி, கெட்டி, திருவள்ளூர், ஏற்காடு, மேற்கு தாம்பரம் தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

    நாளையுடன் விடைபெறும் அக்னி நட்சத்திரம்

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டில் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கினாலும், கோடை மழை இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

    கோடை மழை சற்று குறைந்ததும் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உக்கிரத்தை வெளிகாட்டியது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த கத்தரி வெயில் காலத்தில் உச்சபட்ச வெயில் பதிவாக இருந்து வருகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 இடங்களுக்கு மிகாமல் வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கிறது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) விடைபெற இருக்கிறது. இதனால் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் உக்கிரத்துடன் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
    • தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரத்தை பார்க்கலாம்.

    சென்னை :

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    மீனம்பாக்கம் - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)

    கோவை - 97.88 டிகிரி - (36.6 செல்சியஸ்)

    குன்னூர் - 76.28 டிகிரி - (24.6 செல்சியஸ்)

    கடலூர் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    தர்மபுரி - 97.16 டிகிரி - (36.2 செல்சியஸ்)

    ஈரோடு - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.84 டிகிரி - (33.8 செல்சியஸ்)

    கரூர் - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 70.7 டிகிரி - (21.5 செல்சியஸ்)

    மதுரை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    நாகை - 99.86 டிகிரி - (37.7 செல்சியஸ்)

    நாமக்கல் - 98.6 டிகிரி - (37 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 100.76 டிகிரி - (38.2 செல்சியஸ்)

    சேலம் - 98.6 டிகிரி - (37 செல்சியஸ்)

    தஞ்சை - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    திருச்சி - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)

    திருத்தணி - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 91.76 டிகிரி - (33.2 செல்சியஸ்)

    ஊட்டி - 68.36 டிகிரி - (20.2 செல்சியஸ்)

    வால்பாறை - 82.4 டிகிரி - (28 செல்சியஸ்)

    வேலூர் - 104 டிகிரி - (40 செல்சியஸ்)

    இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது.
    • டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    புதுடெல்லி :

    கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக தெறித்தது. மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர்.

    இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்க, சில இடங்களில் மழைத்துளியும் விழுந்தது.

    இதற்கிடையே, இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இனி வானில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்படும் எனவும், கோடைகாலத்துக்கு முந்தைய மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

    மலைப்பாங்கான இடங்களில் கனமழை பெய்யும் என்றும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேற்கண்ட மாநிலங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறியுள்ளது.

    • தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.
    • இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொருத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 3.7 செல்சியஸ் வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    கோவை - 96.08டிகிரி (35.6 செல்சியஸ்)

    கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    தர்மபுரி - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

    ஈரோடு -102.56டிகிரி (39.2 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 91.4 டிகிரி (33 செல்சியஸ்)

    கரூர் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)

    மதுரை நகரம் -101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    நாகப்பட்டினம் - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)

    சேலம் -100.58டிகிரி (38.1 செல்சியஸ்)

    தஞ்சாவூர் -100.58 டிகிரி (38 செல்சியஸ்)

    திருப்பத்தூர் -102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருச்சி -101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    திருத்தணி -101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

    தூத்துக்குடி -92.48 டிகிரி (33.6 செல்சியஸ்)

    ஊட்டி -72.86 டிகிரி (22.7 செல்சியஸ்)

    வால்பாறை - 82.4 டிகிரி (28 செல்சியஸ்)

    வேலூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    • பெரிய அளவில் மழை பதிவாகவில்லை.
    • டிசம்பர் 31-ந்தேதியுடன் பருவமழை நிறைவு பெறும்.

    சென்னை :

    வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு தொடங்கி, டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்கும். சில நேரங்களில் ஜனவரி முதல் வாரம் வரை கூட இருக்கும்.

    அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியில் தொடங்கியது. முதல் 2 மழைப் பொழிவில் எதிர்பார்த்த மழை பதிவானது. அதனைத்தொடர்ந்து இடைவெளி ஏற்பட்ட நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த மாண்டஸ் புயல் காரணமாக, வட மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்தது.

    அதன்பின்னர், பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது வரை இயல்பையொட்டி மழை பதிவாகியுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடங்கியதில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, 44.1 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் சற்று அதிகமாக 44.5 செ.மீ. மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், புள்ளி விவரத்தின் படி அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பொழிந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக திருவாரூரில் 33 சதவீதமும், அதற்கடுத்தபடியாக நாகப்பட்டினம் 31 சதவீதம், தூத்துக்குடி 30 சதவீதம் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகியிருக்கிறது.

    இதேபோல், புதுச்சேரியில் இயல்பைவிட 20 சதவீதமும், காரைக்காலில் 30 சதவீதமும் மழைப்பொழிவு குறைந்திருக்கிறது.

    அதேநேரத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவான மாவட்டங்களில், அதிகபட்சமாக ஈரோட்டில் 58 சதவீதமும், அதற்கடுத்தபடியாக திருப்பத்தூரில் 55 சதவீதமும், நாமக்கலில் 40 சதவீதமும், கோவையில் 38 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 37 சதவீதமும், காஞ்சீபுரத்தில் 36 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களிலும் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாகியிருக்கிறது.

    வழக்கமாக டிசம்பர் 31-ந்தேதியுடன் பருவமழை நிறைவு பெறும். அந்தவகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் சூழலுக்கு வந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல், கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழையும் பதிவாகவில்லை. ஆனால் வானிலை ஆய்வு மையம் பருவமழை நிறைவு பெறுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய கணிப்பின்படி, இயல்பையொட்டி மழை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டியே இந்த ஆண்டு மழை பதிவானபடி வடகிழக்கு பருவமழை விடைபெறும் என்று ஆய்வு மைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • தென் மேற்கு பருவமழை காலத்தில் 45 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது.
    • வடகிழக்கு பருவமழை அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை :

    ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென் மேற்கு பருவமழை காலம் விலகுவதற்கான சூழல் தற்போது நிலவி வருவதாக கூறப்படுகிறது. தென் மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்ற பிறகு, அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த பருவமழை காலத்தில்தான் தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் சில இடங்களுக்கு அதிகளவு மழை கிடைக்கும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்த ஆண்டு எந்த அளவு மழை இருக்கும்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் நேற்று தகவலாக தெரிவித்துள்ளது.

    அதன்படி, ''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் இம்மாதம் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாகவும்'' தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடும் பனிப்பொழிவுக்கான காரணம் என்ன? என்பதற்கு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து இருக்கிறது. #RegionalMeteorologicalCentre #Fog
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்து இருக்கிறது.

    வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியிலேயே பனிக்காலம் தொடங்கிவிடும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் இடையிலே பனியின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது.

    நகரப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஏதோ மலைப்பகுதியில் வசிப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அதிகாலையில் பனிமூட்டங்களை பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது.



    இந்த நிலையில் கடும் பனிப்பொழிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும், இன்னும் எத்தனை நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    நமக்கு இது பனிப்பொழிவு காலம் தான். ஆனால் தற்போது மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதால், பூமியின் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. அதோடு கூட, இந்த நேரம் நமக்கு வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வீசுவதால் கடும் பனிப்பொழிவு சூழல் காணப்படுகிறது.

    இன்னும் 10 நாட்களுக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும். அதன்பின்னர், வழக்கமான கால சூழ்நிலையை நாம் உணரலாம். மழைக்கான வாய்ப்பு துளி அளவும் கூட இல்லை. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #RegionalMeteorologicalCentre #Fog

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #Gaja #Storm
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் மழை இல்லை.

    இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியது. பின்னர் இது புயலாக மாறியது. இதற்கு ‘கஜா’ என்று பெயரிட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    வடமேற்கு திசையை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று அறிவித்துள்ளது. #GajaCyclone #Gaja #Storm
    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    பொதுவாக ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை தென்மேற்கு பருவ மழை காலம் ஆகும். இதே போன்று அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை வடகிழக்கு பருவ மழை காலம் ஆகும். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் ஏற்படும் வானிலை மாற்றத்தின்படி ஒருசில நாட்களுக்கு முன், பின் இந்த பருவ மழை காலங்கள் தொடங்கும்.

    அதன்படி தென்மேற்கு பருவ மழையானது கடந்த மே மாதம் 26-ந் தேதி அந்தமானிலும், 29-ந் தேதி கேரளாவிலும் தொடங்கியது. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய போதே, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழகம் தவிர ஏனைய இந்திய மாநிலங்கள் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் மழை பெறும் என்றும், தமிழகத்துக்கு மிகக்குறைவான அளவே மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.

    அதே போன்று, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழையால் கடுமையான வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அந்த மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் உள்பட பெரும்பாலான அணைகளும் நிரம்பி வழிந்தன. எனினும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழை பொழியவில்லை.



    இந்த நிலையில், கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையானது வழக்கத்தை விட 14 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவ மழையை விட, தென்மேற்கு பருவ மழை காலத்தில் குறைந்த அளவே மழை பெய்யும். அதிலும், தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும். இவை தவிர்த்த அனைத்து மாவட்டங்களும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளன. பிற மாவட்டங்களை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது வெப்பச்சலனம் காரணமாகவே மழை கிடைக்கிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவ மழையினால் 321.4 மில்லி மீட்டர் மழையும், வடகிழக்கு பருவ மழையினால் 442 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக கிடைக்கும். இது இயல்பான அளவு ஆகும். அதன்படி தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரை 190.4 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால், இன்று (நேற்று) வரை பெய்துள்ள மழை அளவின் படி 163.2 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 14 சதவீதம் குறைவு ஆகும்.

    எனினும் எங்கள் கணக்கீடு படி, 19 சதவீதம் வரையிலான மழை அளவின் கூடுதல் அல்லது குறைவு என்பதை நாங்கள் இயல்பான மழை அளவாகவே கருதுகிறோம். எனவே தற்போது வரை இயல்பான மழை பெய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டை பொறுத்தவரையில் இதே காலகட்டத்தில் வழக்கத்தை விட 26 சதவீதம் கூடுதலாக மழை பெய்து 240.6 மில்லி மீட்டர் மழை அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #MeteorologicalCentre
    ×