என் மலர்
உள்ளூர் செய்திகள்
16 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது: வேலூரில் 107.24 டிகிரி பதிவு
- கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.18 டிகிரி பதிவானது.
சென்னை :
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தாலும், அனல் காற்றினாலும் மக்கள் வாடி வதங்கி போய் இருக்கின்றனர். அந்தவகையில் நேற்று தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. இதில் வேலூரில் அதிகபட்சமாக 107.24 டிகிரி பதிவானது. இதுதவிர நேற்று ஒரே நாளில் கரூரில் இயல்பைவிட 5 டிகிரியும், மதுரை, வேலூர், தூத்துக்குடியில் 4 டிகிரியும் அதிகரித்து வெப்பம் உக்கிரமாக இருந்தது. தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் நேற்று வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் -104.18 டிகிரி
சென்னை மீனம்பாக்கம் -105.26 டிகிரி
ஈரோடு - 102.56 டிகிரி
கரூர் - 103.1 டிகிரி
மதுரை நகரம் - 103.28 டிகிரி
மதுரை விமான நிலையம் - 103.28 டிகிரி
நாகப்பட்டினம் - 101.3 டிகிரி
நாமக்கல் - 101.3 டிகிரி
பாளையங்கோட்டை - 101.12 டிகிரி
பரங்கிப்பேட்டை - 102.2 டிகிரி
தஞ்சாவூர் - 100.4 டிகிரி
திருப்பத்தூர் - 101.48 டிகிரி
திருச்சி - 102.38 டிகிரி
திருத்தணி - 105.98 டிகிரி
தூத்துக்குடி - 103.1 டிகிரி
வேலூர் - 107.24 டிகிரி