என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு
- தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
- சென்னை எழும்பூரில் இருந்து இன்று கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 13, 14-ந் தேதியும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வண்டி எண். 06055) மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் (06056) அதே நாள் இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.