என் மலர்

  தமிழ்நாடு

  தலைமை கழகம் என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுக்குழு அழைப்பிதழ் அனுப்புவதை ஏற்க முடியாது- வைத்திலிங்கம்
  X

  தலைமை கழகம் என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுக்குழு அழைப்பிதழ் அனுப்புவதை ஏற்க முடியாது- வைத்திலிங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. பொருளாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளது.
  • அழைப்பிதழை அனுப்பி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாலும் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை.

  சென்னை:

  அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை வருகிற 11-ந் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் செய்து வருகின்றனர்.

  இதுதொடர்பான அழைப்பிதழ்கள் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

  இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக வைத்திலிங்கம் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

  அ.தி.மு.க. பொருளாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளது. அவரது ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது. பொருளாளருக்குத்தான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது.

  தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பியது ஏற்புடையது அல்ல. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகிறார்.

  அழைப்பிதழை அனுப்பி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாலும் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தினால் அது செல்லாது.

  இவ்வாறு வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

  Next Story
  ×