search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளம், புயல் பாதிப்பை தடுக்க சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகளில் மாற்றம்
    X

    வெள்ளம், புயல் பாதிப்பை தடுக்க சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகளில் மாற்றம்

    • மாநகரப் பகுதியில் பல பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.
    • சென்னை நகரில் சுற்றுலாவுக்காக பல கடற்கரைகளை உருவாக்கப்படும்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தற்போது புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

    இந்த பணிகளை 15 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மிச்சாங் புயலுக்கு பிறகு சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை கருத்தில் கொண்டு 3-வது கட்ட பணிகளில் திருத்தம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள வளர்ச்சியை ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    திருத்தப்பட்ட திட்டத்தில் வெள்ள தடுப்பு மற்றும் புயல் பாதுகாப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

    பெருவெள்ளம் புயலால் பாதிப்பு ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான பணிகளை தொடங்கினர். அது தற்போது 5904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் துணை நகரங்களாக கண்டறியப்பட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீஞ்சூர், திருவள்ளூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மழை புயல் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த சென்னை மாநகர வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    மேலும் சென்னை மாநகரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிக உயரமான கட்டிடங்கள் புதிய சாலைகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளது . மாநகரப் பகுதியில் பல பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.

    சென்னை நகரில் சுற்றுலாவுக்காக பல கடற்கரைகளை உருவாக்கப்படும். இது தொடர்பாக திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் பணிகள் நடக்கின்றன. அதேபோல மாநகரில் சாதி பெயருடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்கள் பொதுவாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×