search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் மர்ம காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழ்நாட்டில் மர்ம காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    • மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வகையான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டுவதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமான மாறுபட்ட காலநிலை தான் மர்மக் காய்ச்சலுக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடம் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து கிராமங்களிலும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ முகாம்களை நடத்தி, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×