search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் மேலும் பின்னடைவு- அரசியல் எதிர்காலம் என்ன? கலக்கத்தில் ஆதரவாளர்கள்
    X

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் மேலும் பின்னடைவு- அரசியல் எதிர்காலம் என்ன? கலக்கத்தில் ஆதரவாளர்கள்

    • ஓ.பன்னீர்செல்வம் தனியாகவே செயல்பட்டு வந்தார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி தனது பலத்தை காட்டியுள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    1½ மாதங்களுக்கு முன்பே விசாரணை முடிந்து விட்ட நிலையில் இன்று கூறப்பட்ட தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமியின் பின்னால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் அணிவகுக்கும் நிலையில்தான் பொதுக் குழுவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது சிறப்பு தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற தீர்மானங்களை எதிர்த்துதான் ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆகியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கும் அ.தி.மு.க.வினருக்கும் அடுத்த வெற்றியை அளித்து மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    அதே நேரத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனியாகவே செயல்பட்டு வந்தார். தற்போது டி.டி.வி. தினகரனோடு கைகோர்த்துள்ள அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பது ஐேகார்ட்டு தீர்ப்பால் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

    அ.தி.முக. விவகாரத்தில் ஏற்கனவே கடும் பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பி.எஸ். இனி என்ன செய்ய போகிறார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ். தனிக் கட்சி தொடங்குவாரா? என்கிற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்கள் திசை தெரியாமல் பயணித்து வருகிறார்கள்.

    இன்றைய ஐகோர்ட்டு தீர்ப்பு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உளளது.

    Next Story
    ×