search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரட்டூர் சாலையில் திடீர் பள்ளம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    X

    கொரட்டூர் சாலையில் திடீர் பள்ளம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    • கார் ஓட்டுனர் உடனடியாக வெளியேறியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
    • பள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை கொரட்டூர் பகுதி தொழிற்சாலை நிறைந்தது. இப்பகுதியில் பரபரப்பான காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் இயங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனையடுத்து கார் ஓட்டுனர் உடனடியாக வெளியேறியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    பள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர் செய்தனர்.

    Next Story
    ×