என் மலர்

  தமிழ்நாடு

  சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு- மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
  X

  சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு- மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
  • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி 1 கிராம் ரூ.58.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு விற்கப்படுகிறது.

  சென்னை:

  தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

  தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுன் ரூ.38,032-க்கு விற்பனையானது. மறுநாள் 1-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்து ரூ.37,680 ஆக குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டது.

  நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4736-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4750-க்கு விற்கப்படுகிறது.

  இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி 1 கிராம் ரூ.58.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

  Next Story
  ×