search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் தேர்தல் 5 மாதம் தள்ளிப்போகிறது
    X

    காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் தேர்தல் 5 மாதம் தள்ளிப்போகிறது

    • ராகுல் பாத யாத்திரை நிகழ்ச்சியால் கட்சி தேர்தல் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
    • 150 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பாத யாத்திரை அடுத்த ஆண்டு (ஜனவரி) மாதம் நிறைவடைகிறது.

    சென்னை:

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. வட்டாரம், நகரம், மாவட்டம் என்று பல கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் பெயர் பட்டியலும் தயாராகி விட்டது. ஆனால் இன்னும் வெளியிடப்படவில்லை.

    அடுத்தக்கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    இறுதியாக அகில இந்திய தலைவர் தேர்வு செய்யப்படுவார். இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது ராகுல் பாத யாத்திரை நிகழ்ச்சியால் கட்சி தேர்தல் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. 150 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பாத யாத்திரை அடுத்த ஆண்டு (ஜனவரி) மாதம் நிறைவடைகிறது.

    இந்த பாத யாத்திரையை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும் கட்சி மேலிடம் உத்தரவு போட்டுள்ளது.

    எனவே உள்கட்சி தேர்தலை 5 மாதங்கள் தள்ளி வைக்கவும், முடிவு செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    எனவே மாநில தலைவர்கள், அகில இந்திய தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×