search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை- சென்னையில் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை- சென்னையில் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

    கொளத்தூர்:

    பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (29-ந்தேதி) கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    சென்னையில் புளியந்தோப்பு, ஆடு தொட்டி, ரெட்டேரி சந்தை, தாம்பரம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத்தையொட்டி ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதியில் இருந்தே ஆடுகள் விற்பனை இந்த சந்தைகளில் சூடு பிடித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்காக வந்துள்ளன.

    இநத ஆடுகள் விற்பனை நாளை வரை நடைபெறுகிறது. இதுவரை ரூ.14 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாக ஆடு வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

    வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகளை கொண்டு வரும் போது இது போன்ற பண்டிகை நாட்களில் போலீசார் பண வசூலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து மாதவரம் பகுதிக்கு வருவதற்குள் போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×