என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது
- மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
- பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின.
சென்னை:
தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின. இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கட்சிகளுக்கான கூட்டணி பெயர் அறிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை, செந்தில் பாலாஜியிடம் நடைபெற்று வரும் விசாரணை என அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.