search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை 10 மணி வரை 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
    X

    காலை 10 மணி வரை 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    • இன்று முதல் 19-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை.

    தென்மேற்கு வங்கக்கடலில நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

    சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

    இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிடு இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொதுவமாக டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×