search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை மையம்"

    • இன்று முதல் 19-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை.

    தென்மேற்கு வங்கக்கடலில நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

    சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

    இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிடு இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொதுவமாக டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    • கடந்த 14-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றது.
    • வங்காளதேசத்தில் மிதிலி புயல் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்று, வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல், சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று பிற்பகலில் கரையை கடக்கத் தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காளதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அப்போது பலத்த காற்று வீசியதுடன் கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இந்தப் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்காளதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    • தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையையொட்டி, வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி உருவானது. அது வலுப்பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தது.

    நேற்று முன்தினமும், நேற்றும் இந்த குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து வலுப்பெற்றதால் புயல் சின்னமாக மாறியது. நேற்று அது ஆந்திர கடலோர பகுதிகளில் நிலைக்கொண்டிருந்தது.

    அந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமாா் 420 கி.மீ. கிழக்கு தென் கிழக்கே நிலைகொண்டிருந்தது.

    அந்த புயல் சின்னம் நேற்று வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு அது ஒடிசா கடல் பக்கம் நிலைக்கொண்டிருந்தது. அந்த புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று மீண்டும் வடமேற்கு திசைக்கு மாறி செல்லும் என்று வானிலை ஆய்வு நிலையம் கூறி இருந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு 'மிதிலி' என்று பெயா் சூட்டப்படும். இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது.

    இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து கொண்டிருக்கிறது. நாளை (18-ந் தேதி) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்பு பாராவு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு கணித்துள்ளது.

    இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையையொட்டி, வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 22-ந்தேதி வரை 6 நாட்கள் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    குறிப்பாக, இன்று (17-ந் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி 80 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் 70 மி.மீ., தக்கலை 60 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி 50. மி.மீ. மழை பதிவானது.

    வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல், மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் இன்று (17-ந்தேதி) சூறாவளிக்காற்று மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 14-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றது.
    • நாளை அதிகாலை வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது.

    கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிகாலையில் வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் மிதிலி புயல் நிலை கொண்டுள்ளது. சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    மதுரை

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ள நிலையில் தமிழ்நாட் டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரண மாக இன்றும், நாளையும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் கனமழை பெய் யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.

    205 மி.மீ. மழை பதிவு

    இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத் துடனும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களை தவிர மாவட்டம் முழுவதும் 205 மி.மீட்டர் மழை பதிவாகியுள் ளது.

    இதில் அதிகபட்சமாக பேரையூரில் 103 மில்லி மீட்டரும், கள்ளிக்குடியில் 52.20 மில்லி மீட்டரும், எழு மலையில் 39.80 மீட்டர் மழையும் பதிவானது. மேலும் மதுரை விமான நிலையம், விரகனூர், சிட் டம்பட்டி, இடையபட்டி, கள்ளந்திரி, தல்லாகுளம், மேலூர், புலிப்பட்டி, தனியா மங்க லம், சாத்தையாறு அணைப்பகுதி, மேட்டுப் பட்டி, ஆண்டிப்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, குப்பனம் பட்டி, திருமங்கலம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் சார லுடன் கூடிய மழை பெய் தது. வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் அனை வரும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சம்பா, குருவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய மழை இல்லாததால் சம்பா குறுவை சாகுபடி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

    வைகை அணையில் இருந்து குடிநீருக்காக மட் டுமே தண்ணீர் திறக்கப்பட்ட தால் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந் திருந்தது. இதனால் ஏற்பட் டுள்ள பொருளாதர இழப்பை சரி செய்யும் வகையில் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கண்மாய், கிணறு உள்ளிட்ட நீர் நிலை களில் தண்ணீர் வேகமாய் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நீர்மட்டம் உயர்வு

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணி களை மேற்கொள்ள விவசா யிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். தொடர் மழை யால் முல்லைப் பெரியாறு அணையில் 122.80 அடியும், வைகை அணையில் 55.09 அடியும், சாத்தையாறு அணையில் 17.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்து உள்ளனர்.

    • தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது.
    • சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

    திருப்பூர்

    தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது. அதிகபட்சம் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் இணைந்து வெளியிடும் வானிலை அறிக்கையில், வரும் நாட்களில் திருப்பூரில் அதிகபட்சம் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் நிலவும். இரவில் 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். சராசரியாக மணிக்கு 17 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேக மூட்டம் மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிர் சத்துகள் உறிஞ்சுவது குறைவாக காணப்படும்.

    எனவே வேப்ப புண்ணாக்கு கலந்த தழைச்சத்து உரங்களை இட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
    • கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த போதிய அளவு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை குறிப்பு விவரம் வருமாறு:-

    மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை 36 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.திருப்பூரில் வரும் வாரம் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு.சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலான வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

    தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த வாய்ப்புள்ளது. போதிய அளவு சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.
    • சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    நாளை (23-ந்தேதி) தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24 முதல் 26-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும் என்பதாலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
    • சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ×