search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இன்று இரவு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இன்று இரவு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது
    • பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதற்கு முன்னதாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    Next Story
    ×