search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி
    X

    செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

    • புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
    • நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் டாக்டர்கள் செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜூன் மாதம் கைதான அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

    இதன் பின்னர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரான பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் டாக்டர்கள் அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கால்கள் இன்று அதிகாலையில் மரத்துப்போய் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து டாக்டர்கள் விரைந்து சென்று அவரது கால்களை பரிசோதித்து பார்த்தனர். இதில் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கால்கள் மரத்துப்போனது தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் காலை 6.30 மணி அளவில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இ.சி.ஜி., எக்கோ மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கால் மரத்துப்போனதை சரி செய்வதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் இன்றே செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×