search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரேஷன் கடைகளில் தக்காளி இல்லை- நடுத்தர மக்கள் ஏமாற்றம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரேஷன் கடைகளில் தக்காளி இல்லை- நடுத்தர மக்கள் ஏமாற்றம்

    • தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தக்காளி விலை ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தக்காளி கிலோ இன்னும் ரூ.120 முதல் ரூ.130 வரை சில்லறை காய்கறி கடைகளில் விற்கப்படுவதால் குறைந்த அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது. கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    கர்நாடகாவில் தக்காளியை அதிக விலைக்கு வாங்கி வந்து நஷ்டத்திற்கு தான் கூட்டுறவு சங்கங்கள் தற்போது தக்காளியை விற்கின்றன. இதனால் குறைந்த அளவில் தான் ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு விற்பனைக்கு வரும் தக்காளி 11.30 மணிக்குள் விற்று விடுகின்றன.

    இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    அடையார், மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, 60 டி.யு.சி.எஸ். நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு 42 கிலோ தக்காளி வினியோகம் செய்கிறோம். அவை 11 மணிக்குள் விற்று விடும். தக்காளி அதிக விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு கிலோ ரூ.60-க்கு விற்பதால் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் முடிவை ஏற்று விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    Next Story
    ×