search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மக்களை 2 மாதமாக மிரட்டும் டெங்குவை விரட்ட ரசாயன பந்துகள் அதிகம் தயாரிப்பு
    X

    சென்னை மக்களை 2 மாதமாக மிரட்டும் டெங்குவை விரட்ட ரசாயன பந்துகள் அதிகம் தயாரிப்பு

    • திறந்த வெளிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
    • வடகிழக்கு பருவமழை சென்னையில் தீவிரமாக வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் முன்னரே சென்னை மக்களை டெங்கு காய்ச்சல் மிரட்டத் தொடங்கி இருக்கிறது. கடந்த மாதத்தில் இருந்தே டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறந்த வெளிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வீடுகளை சுற்றியும் மொட்டை மாடிகளிலும் மழை நீர் தேங்கும் அளவுக்கு தேவையில்லாத பாத்திரங்களையோ சிரட்டைகளையோ போட்டு வைக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையால் தேங்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு அதிக அளவில் கொசுக்களை உற்பத்தி செய்து அதன் மூலமாக டெங்கு காய்ச்சலை பரப்புவது அதிகரித்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை சென்னையில் தீவிரமாக வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

    இதையடுத்து மழைநீர் தேங்கும் பகுதிகளில் டெங்கு கொசுக்கள் புழுக்களாக இருக்கும்போதே விரட்டி கொல்லும் தன்மை கொண்ட ரசாயன பந்துகளை அதிகம் தயாரித்து சுத்தமான மழைநீர் தேங்கும் பகுதிகளில் வீசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் டெங்கு கொசுக்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×