search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் புத்தக திருவிழா- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பார்வையிட்ட காட்சி.

    தூத்துக்குடியில் புத்தக திருவிழா- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

    • 4-ம் புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழக மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் வகையிலும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை வாய்ப்பிற்காக பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்கள் ஒரே இடத்தில் அனைத்து வகையான புத்தகங்களையும் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி, தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தின் 4-ம் புத்தகத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    அதனை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில் மேயர் ஜெகன்பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள், 10 அரசுதுறை அரங்குகள், பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் தனியாக 40 அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமையை, தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூர் ஆகியவற்றில் கிடைத்த முதுமக்கள் தாழி, மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது? என்பது குறித்து மாதிரி செயல்வடிவம் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

    புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறி உள்ளார்.

    Next Story
    ×