search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெரம்பூரில் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கல்லூரி மாணவர் கொலையா?

    பெரம்பூரில் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கல்லூரி மாணவர் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அப்வின்டர் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சேகர். வருடைய மகன் வெஸ்லி என்கின்ற கார்த்திக். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

    இவர் தினந்தோறும் காலையில் அரக்கோணம் ரெயிலில் இருந்து புறப்பட்டு அம்பத்தூர் சென்று விட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்று எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரக்கோணத்திற்கு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவன் சென்னையிலிருந்து கர்நாடகா செல்லும் கூப்ளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டார்.

    வியாசர்பாடி பெரம்பூர் இடையே ரெயில் வந்தபோது திடீரென கார்த்திக் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பயணிகள் ரெயிலை நிறுத்தினர். இதில் சக்கரத்துக்கு அடியில் சிக்கிய கார்த்திகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் நடத்துனர் 2 வாலிபர்கள் உதவியுடன் வெளியே எடுத்தார்.

    மாணவன் கார்த்திக் உயிருக்கு போராடிய நிலையில் கதறி துடிதுடித்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

    உயிருக்குப் போராடிய கார்த்திக் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மாணவர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, கார்த்திக்கை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்றபோது ஓட்டுநரிடம் ரெயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது தனக்கு செல்போனில் அழைப்பு வந்ததாகவும் பேசுவதற்காக படிக்கட்டு அருகே வந்தபோது அங்கு திடீரென ஏறிய அடையாளம் தெரியாத 2 பேர் செல்போன் பறிக்க முற்பட்டதாகவும் இந்த போராட்டத்தில் கீழே தள்ளப்பட்டதாகவும் கூறியதாக தெரிவித்தனர்.

    மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவரிடம் இதனை கார்த்திக் கூறி இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாரிடம் கேட்டபோது படிக்கட்டில் பயணம் செய்து கீழே விழுந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை வந்த பிறகு அல்லது உறவினர்கள் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அது குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், “இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. உடனடியாக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மாணவர் கார்த்திக்கின் தங்கை அஞ்சலி பிளஸ்2 வேதியல் தேர்வு எழுத ஆயத்தமான நிலையில் இந்த துயர சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×