search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,824-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 14-ந்தேதி பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுன் மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 112க்கு விற்றது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்தது. ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.37 ஆயிரத்து 824க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 728 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.65 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10க்கு விற்கிறது.
    Next Story
    ×