என் மலர்

  தமிழ்நாடு

  எடப்பாடி பழனிசாமி
  X
  எடப்பாடி பழனிசாமி

  வி.ஜி.பி. கடற்கரையில் வணிகர் தின மாநாடு- எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்-அமைச்சர் சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

  சென்னை:

  தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் மே 5ந் தேதி 39வது வணிகர் தின மாநாட்டை சென்னை வி.ஜி.பி. கடற்கரையில் நடத்துகிறது.

  வணிகத்தை சீர்குலைக்கும் லுலு மார்க்கெட் ஒப்பந்தத்தை கைவிடக்கோரும் மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டுக்கு சங்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமை தாங்குகிறார். சங்கத் தலைவர் எம்.மாரித்தங்கம் வரவேற்கிறார். மாநாட்டை வி.டி.பத்மநாபன் தொடங்கி வைக்கிறார்.

  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்-அமைச்சர் சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

  இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், விஜய்வசந்த் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, முன்னாள் ஐ.ஜி.ஆறுமுக நயினார், பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சத்திரியர் மக்கள் கட்சித்தலைவர் மின்னல் ஸ்டீபன், ராகம் சவுந்தரபாண்டியன், ஜாக்குவார் தங்கம், கணேஷ் ராம், சந்திரசேகர், முத்து ரமேஷ், சண்முகவேல் பெருமாள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

  ஆர்.சந்திரன் ஜெயபால் எழுதிய ‘முடிவெடு மடியுமுன்னே’ என்ற நூலை நீதிபதி பி.ஜோதிமணி வெளியிட கலைமாமணி வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொள்கிறார். முடிவில் பொதுச்செயலாளர் ஹாஜி மம்முசா நன்றி கூறுகிறார்.

  Next Story
  ×