search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெரினா கடற்கரை நீச்சல்குளம்
    X
    மெரினா கடற்கரை நீச்சல்குளம்

    மெரினா கடற்கரை நீச்சல்குளம் நாளை மறுநாள் மீண்டும் திறப்பு

    கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் மெரினா போன்ற நீச்சல் குளங்களில் அடுத்த இரண்டு மாதமும் இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. நாளையுடன் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்படுகிறது. இதே போல வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் உள்ள நீச்சல் குளம் வருகிற 5-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்காக நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த 2 நீச்சல் குளங்களையும் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மெரினா நீச்சல் குளம் 100 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஒருமணி நேரத்துக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நீச்சல் குளம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெரினா நீச்சல் குளத்தில் தினமும் 2 ஆயிரம் பேர் வரை வந்து பொழுதை கழிப்பது வழக்கம்.

    நாளை மறுநாள் (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் மெரினா நீச்சல் குளத்துக்கு அதே அளவு பொதுமக்கள் வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் மெரினா போன்ற நீச்சல் குளங்களில் அடுத்த இரண்டு மாதமும் இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நீச்சல் குளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×