search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    பொங்கல் சிறப்பு ரெயில் மூலம் ரூ.6 லட்சம் வருவாய்- ஆர்.டி.ஐ.யில் தகவல்

    நெல்லை-தென்காசி வழியாக இயக்கப்பட்ட பொங்கல் சிறப்பு ரெயில் மூலம் ரூ. 6 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வீ.கே.புதூர்:

    நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்னைக்கு பொங்கலையொட்டி சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    அந்த ரெயிலில் சுமார் 1,241 பயணிகள் பயணம் செய்தனர். அந்த ரெயிலுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு தென்னக ரெயில்வே அளித்த பதிலில், மொத்த வருமானமாக ரூ.5,98,873 கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ரெயில் நிலையங்கள் வாயிலாக கிடைத்த வருமானம்(லட்சத்தில்) மற்றும் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை விபவரம் வருமாறு:-

    நிறுத்தங்கள்

    வருவாய்

    பயணிகள்

    தென்காசி

    1,63,833

    304

    நெல்லை

    1,02,393

    183

    ராஜபாளையம்

    1,00,787

    184

    அம்பை

    51,065

    104

    பாவூர்சத்திரம்

    47,929

    115

     

    இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத ஒரே வழித்தடமான அம்பை, கடையம், பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு ரெயில்கள் வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாவூர்சத்திரம், அம்பை சுற்றுவட்டார மக்கள் ரூ.1,500 வரை பஸ்களுக்கு கொடுத்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தீபாவளி, பொங்கலுக்கு சிறப்பு ரெயில் இயக்கியதை போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    Next Story
    ×