search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது

    சென்னையில் 9 மண்டலங்களில் நோய் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அடையாறு, கோடம்பாக்கம் மண்டலங்களில் நோய் தொற்று 5 ஆயிரத்தை தாண்டி உச்சத்தில் உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 8,998 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    நேற்றைய நிலவரப்படி தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 6,753 பேரும், அண்ணாநகரில் 6,439 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இதே போல் சென்னையில் 9 மண்டலங்களில் நோய் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அடையாறு, கோடம்பாக்கம் மண்டலங்களில் நோய் தொற்று 5 ஆயிரத்தை தாண்டி உச்சத்தில் உள்ளது.

    கடந்த மாதம் வரை சென்னையில் நோய் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் 1 சதவீதத்துக்கும் கீழ் இருந்தது. ஆனால் தற்போது 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×