என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
நடிகர் ரஜினிகாந்த்
கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் - ரஜினிகாந்த் வேண்டுகோள்
By
மாலை மலர்15 Jan 2022 12:40 AM GMT (Updated: 15 Jan 2022 12:40 AM GMT)

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் தன் புதிய படம் வெளிவரும்போதும், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
அதேபோன்று, பொங்கல் திருநாளான நேற்று, நடிகர் ரஜினி ரசிகர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தனர். அவர்களில் பலர் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல், கூட்டமாக ரஜினி வீட்டு வாசலில் நின்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினி, வீட்டு வளாகத்தின் நுழைவு கேட்டின் உள் பக்கமாக சிறிய பெஞ்சில் ஏறி நின்றவாறு, ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்.
பின், கையெடுத்து கும்பிட்டு, ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு, வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதை தொடர்ந்து, தமது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் ரஜினி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகுது.இதில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள, எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Next Story
×