search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனிமைப்படுத்துதல்
    X
    தனிமைப்படுத்துதல்

    கோவையில் கொரோனா பாதிப்போரில் 88 சதவீதத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி

    கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே இடத்தில் அதிகமாக இல்லாமல் பரவலாகவே காணப்படுகிறது. இதனால் முழு வீதியையும் அடைக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்து. கடந்த ஒருவார காலமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

    கடந்த வாரத்தில் 100-க்கும் கீழே இருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 500, 600, 800, 900 என்று ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

    நேற்று ஒரே நாளில் கோவையில் 981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் முன்புபோல அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலானவர்களுக்கு குறைவான தொற்று பாதிப்பே காணப்படுகிறது. இதனால் வாய்ப்புள்ளவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    கிட்டத்தட்ட 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது 3,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 500 கள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நோய் தொற்று பரவல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே இடத்தில் அதிகமாக இல்லாமல் பரவலாகவே காணப்படுகிறது. இதனால் முழு வீதியையும் அடைக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. இதனால் கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நபர்களின் வீடுகள், அதனை சுற்றியுள்ள வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்படும் நபர்களின் வீடுகள், ஒரே வீட்டில் 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுகிறது.

    அதன்படி தற்போது மாவட்டத்தில் 96 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்களின் உடல்நலம் குறித்து தினமும் கட்டுப்பாட்டு அறைமூலம் விசாரிக்கப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.
    Next Story
    ×