search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    நெல்லுக்கு உரிய விலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கொடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்று அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் மூழ்கி வீணாகிவிட்டது. ஏற்கனவே குறுவை சாகுபடியும் பாதிப்படைந்து பெருத்த நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடியும் நஷ்டத்தை கொடுத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு பொருளாதாரம் இருக்காது.

    எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மழையால் சேதமடைந்துள்ள சம்பா பயிர்களை ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்கவும், நெல் சேமிப்பு கிடங்குகளில் நெல்லை கொள்முதல் செய்யும் வரை நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் போர்த்தி பாதுகாக்கவும், நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கொடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×