search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஒமைக்ரான் பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு

    சிங்கப்பூர், இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    கோவை:

    ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முன்பு அதிக ரிஸ்க் நாடுகள் தவிர, பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த எண்ணிக்கையானது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அதிக ரிஸ்க் உள்ள நாடுகள் என கண்டறியப்பட்டு உள்ள தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொரீசியஸ், சிங்கப்பூர், இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அவர்கள் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 8-வது நாளில் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தொற்று உறுதியானால், அந்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் முன்பு 2 சதவீதம் பேரிடம் இருந்து கட்டாயமாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக இது 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 26-ந் தேதி வரை வெளி நாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு 4,287 பேர் வந்துள்ளனர்.

    அவர்களில் அதிக ரிஸ்க் உள்ள நாடுகளில் இருந்து வந்த 57 பேர், மற்ற வெளிநாடுகளில் இருந்து வந்த 133 பேர் என 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×