என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தஞ்சை அருகே கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற மனைவி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே குடும்ப தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
  வல்லம்:

  தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (வயது 62)விவசாயி. இவருடைய மனைவி வீரம்மாள் (55). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.

  சம்பவத்தன்றும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. ஏற்கனவே கணவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த வீரம்மாள் வீட்டில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை பாத்திரத்துடன் எடுத்து வந்து சின்னையன் மீது ஊற்றி உள்ளார். இதில் உடல் முழுவதும் வெந்து படுகாயத்துடன் துடி துடித்த சின்னையா கதறி உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னையன் இறந்தார்.

  இது குறித்த புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×