search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

    தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து விலை குறைந்து பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதற்கிடையே கடந்த 4-ந் தேதி தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியது. அன்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்றது.

    ஆனால் அதன்பின் விலை குறைந்தது. கடந்த 6-ந் தேதி முதல் குறைவு காணப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் விலை குறைந்தபடி இருந்தது. ஆனால் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 608-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,440ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.68 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68 ஆக உள்ளது.

    தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து விலை குறைந்து பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    Next Story
    ×