search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூலித்தேவனின் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.
    X
    பூலித்தேவனின் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

    எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்: அண்ணாமலை

    தற்போது தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்.
    தென்காசி :

    தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி ஊழியர் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    சட்டமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதா உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தனர். தற்போது 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சி சார்பில் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட உள்ளனர். இதற்கு நாம் இன்றிலிருந்து 3 மடங்கு உழைக்க வேண்டும்.

    10 வருடமாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. எதுவும் செய்யாமல், மற்ற கட்சிகளை குறைகூறி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. எனவே, எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×