search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்
    X
    சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்

    ஜிகா வைரஸ் எதிரொலி -பொள்ளாச்சி எல்லையில் துணை ஆட்சியர் திடீர் ஆய்வு

    அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வரப்பட்ட வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சோதனை செய்தபிறகே பின் தமிழத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
    பொள்ளாச்சி:

    தமிழக, கேரளா எல்லைப் பகுதியான பொள்ளாச்சியிலுள்ள சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவைத் தொடர்ந்து கொசுக்களினால் ஜிகா வைரஸ் பரவி வருவதாக வந்தச் செய்தியை அடுத்து எல்லைப் பகுதிகளான கோபாலபுரம், நடுப்பணி, மீனாட்சிபுரம், வடக்காடு, ராமபட்டினம் போன்ற சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வரப்பட்ட வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் சோதனை செய்த பிறகே தமிழத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

    இதைத் தவிர கேரளாவிலிருந்து சாலை வழியாக நடந்து வருபவர்கள், பொள்ளாச்சி எல்லைப்பகுதியில் சுகாதாரத் துறையினரின் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். 

    ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அப்பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொள்ளாச்சி எல்லை வழியாக தமிழகத்துக்கு வருபவர்களை முறையாக பரிசோதனைகளைச் செய்த பின்னரே அனுமதிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
    Next Story
    ×