search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக கட்டப்பட்ட குளத்தில் யானை அகிலா உற்சாகமாக குளியல் போட்ட காட்சி.
    X
    புதிதாக கட்டப்பட்ட குளத்தில் யானை அகிலா உற்சாகமாக குளியல் போட்ட காட்சி.

    பிரத்யேக புதிய குளத்தில் உற்சாக குளியல் போடும் யானை அகிலா

    அகிலா குளத்திற்குள் சென்று வருவதற்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
    பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 10 வருடங்களாக இறைப்பணி செய்து வருகிறது.

    தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமிற்கு சென்று விட்டு உற்சாக மனநிலையில் இருந்து வரும் யானை அகிலா குளிப்பதற்காக கோவில் வளாகத்திலுள்ள நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் தடுப்பு சுவர் கொண்ட குளம் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் அகிலா குளத்திற்குள் சென்று வருவதற்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் முறையாக அகிலா அந்த குளத்தில் இறங்கி உற்சாக குளியல் போட்டது.

    இதனை தொடர்ந்து யானை அகிலா தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் மரங்கள் அமைத்து இயற்கையான வனப்பகுதி உருவாக்கப்பட்டு வருவதாக கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.



    Next Story
    ×