search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
    X
    மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

    கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

    மீனவர்கள் போராட்டத்துக்கு குமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) மாவட்ட துணை தலைவர் தனீஸ் தலைமை தாங்கினார்.
    கன்னியாகுமரி:

    மீன்பிடி தடைக்கால நிவாரண உதவி தொகையாக மீனவர்களுக்கு தற்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை ரூ. 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் இதற்காக விண்ணப்பித்து 3 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் இருக்கும் 150 மீனவர்களுக்கு இந்த ஆண்டிலேயே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், தகுதியுள்ள மேலும் 150 மீனவர்கள் இந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.)சார்பில் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி நின்று கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்துக்கு குமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) மாவட்ட துணை தலைவர் தனீஸ் தலைமை தாங்கினார். பெண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.

    Next Story
    ×