search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மதுரையில் கொரோனா உச்சம்- ஒரே நாளில் 1538 பேருக்கு நோய் தொற்று

    மதுரையில் கொரோனா பராமரிப்பு முகாம்களில் லேசான பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோருக்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து விட்டது.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக மதுரை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 36 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1538 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவே உச்சபட்ச பாதிப்பு ஆகும். அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை 463 ஆக குறைந்து உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் அது நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் 20 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது.

    மதுரையில் கொரோனா பராமரிப்பு முகாம்களில் லேசான பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோருக்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து விட்டது. எனவே அவர்கள் கொரோனா ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இதன் காரணமாகவே நோயாளிகளின் நேற்றைய டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×